• Feb 02 2025

பாடகர் உன்னி கிருஷ்ணன் வீட்டு கொண்டாட்டத்தில் வைரமுத்து..!

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடகராக அறிமுகமாகி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களை வென்றுள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக உள்ள இவர் தனது பாடல் கலைக்காக வெகு புகழ் பெற்றவர்.


உன்னிகிருஷ்ணன் 1994 ஆம் ஆண்டில் தனது வாழ்கையின் துணையாக பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உத்ரா மற்றும் வாசுதேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். உத்ரா தனது இசை பயணத்தை சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு என்ற பாடலுடன் துவங்கி பிரபலமடைந்தார். தொடர்ந்து பிசாசு, லட்சுமி போன்ற படங்களில் பாடல்கள் பாடி வருகிறார்.


இருந்தாலும், உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.இந்நிலையில் தற்போது பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள இவரது மகனின் திருமணத்திற்கு பாடலாசிரியர் வைரமுத்து கலந்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களுடன் இந்த மணமக்களுக்கு தனது இன்ஸ்டா  பக்கத்தில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement