• Dec 27 2024

பெறா மகனுக்கு போட்டி போட்டு வாழ்த்துக்களை கூறிய வனிதாவின் சகோதரிகள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா மற்றும் ஆகாஷின் மகன் தான் விஜயஸ்ரீ ஹரி. இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது மாம்போ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இயற்கை அழகோடு வாழ்வியலையும் படம்பிடித்து காட்டும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் மாம்போ என்ற படத்தில் தான்  விஜயஸ்ரீ ஹரி ஹீரோவாக நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் நடிப்பதற்காகவே விஜயஸ்ரீ ஹரி சிங்கங்களுடன் பழகுவதற்கு பிரத்தியேக பயிற்சிகள் எடுத்துள்ளார். காரணம் இதில் ஒரு சிங்கக் குட்டியுடன் விஜயஸ்ரீ ஹரி பயணிப்பதும் அதனை காப்பாற்ற போராடுவதும் தான் இந்த படத்தின் கதைக்களம் ஆக கூறப்படுகின்றது. இதில் ஜோகி பாபு, பிரபு சாலமனின் மகள் ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த படத்தின் போஸ்டர் நேற்றைய தினம் வெளியான நிலையில், தன்னுடைய மகனை நினைத்து பெருமைப்படுவதாக வனிதா கண்ணீருடன் பதிவு ஒன்றை வாழ்த்து கூறி பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், விஜயஸ்ரீ ஹரி ஹீரோவானதற்கு அவருடைய பெரியம்மா அனிதா  மற்றும் அவரின் சித்திகள் ஸ்ரீதேவி, ப்ரிதா  ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தெரிவித்துள்ளார்கள்.

விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை ஆக ஹீரோ ஒருவர் அறிமுகமாகும் நிலையில், இவர்  அருண் விஜயை போல பல தடைகளை தாண்டி சாதிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement