• Dec 25 2024

வாழு & வாழ விடு..நான் துளியும் உடன்படவில்லை..ரசிகர்களுக்கு அஜித்தின் அதிரடி அறிவிப்பு..!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித், தனது ரசிகர்களிடம் அண்மையில் நேரடியான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அவரின் பெயருடன் இணைந்து "கடவுளே, அஜித்தே" என பொது நிகழ்வுகளில் சிலர் எழுப்பும் கோஷம் தன்னைக் கவலையடையச் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த கடிதத்தில் "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க... அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!வாழு & வாழ விடு!"என்று தனது ரசிகர்களிற்கு அறிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

Advertisement