• Dec 27 2024

நடித்தது போதும்.. அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரியும் நடிகை.. கணவருடன் ரொமான்ஸ் புகைப்படம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வித்யா பிரதீப் தற்போது டாக்டருக்கு படித்து முடித்து விட்டதை அடுத்து அவர் அமெரிக்காவில் டாக்டர் பணி செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2010ஆம் ஆண்டு ’அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை வித்யா பிரதீப், அதன்பின் ’சைவம்’ ’பசங்க 2’ ’அச்சமின்றி’ ’மாரி  2’ ’தடம்’ ’தலைவி’ ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ’கண்ணகி’ திரைப்படத்தில் கூட அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவையும் நிறைவேற்றிய நிலையில் தற்போது அவர் டாக்டருக்கு படித்து முடித்து விட்டார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் டாக்டர் பணி கிடைத்துள்ள நிலையில் அங்கு அவர் பணியாற்றி வருகிறார். அவருடைய கணவரும் அங்கேயே செட்டில் ஆகிவிட்ட நிலையில் இனி அவர் நடிக்க மாட்டார் என்றும் அமெரிக்காவில் தனது டாக்டர் பணியை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவரின் பிறந்த நாள் தினத்தில் கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்து 13 வருட அழகான காதல் பயணம் என்று கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement