• Dec 26 2024

சசிகுமார் சொன்ன கதைக்கு ஓகே சொன்ன விஜய்..? கடைசி நேரத்தில் நடந்த குளறுபடி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சசிகுமார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் காணப்படுகின்றார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படும்.

சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ஈசன் படத்தை இயக்கினார். அதன் பின்பு நடிப்பதில் கவனத்தை செலுத்தினார். வெற்றி தோல்வி என அவர் நடித்த படங்களில் இறுதியாக அயோத்தி மற்றும் கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படங்களாக காணப்பட்டது.

அதிலும் அயோத்தி திரைப்படம் ஒருவரின் உணர்ச்சியை புரிந்து கொள்வதற்கு மொழி தேவை இல்லை என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியிருந்தது. இந்த படத்திற்கு பல விருதுகள் கூட கிடைத்துள்ளன.


தற்போது இரா. சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த நந்தன்  திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது. அயோத்தி திரைப்பட கூட்டணி நந்தன் படத்திலும் இணைந்துள்ளதாம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் ஸ்ருதி பெரியசாமி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக சசிகுமார் பங்கேற்று வருகின்றார்.

இந்த நிலையில், இளையதளபதி விஜய் பற்றி சசிகுமார் வழங்கிய பேட்டி  ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், ஈசன் படத்துக்கு பிறகு நான் தளபதி விஜய்யிடம் கதை ஒன்றைக் கூறினேன். அது வரலாற்று சம்பந்தப்பட்ட கதை. விஜய்க்கும் அந்த கதை பிடித்திருந்தது. அவரே  தயாரிப்பாளரையும் காட்டினார். 

ஆனால் அந்த நேரத்தில் பட்ஜெட் எல்லாம் மிகவும் செலவு மிக்கதாக காணப்பட்டது. இதன் காரணத்தினால் அந்த படம் கைவிடப்பட்டது. விஜய் அரசியலில் இருந்தும் அடிக்கடி படம் நடிக்கலாம். விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன் என சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement