• Dec 25 2024

எச்சரிக்கை:- கங்குவா பற்றி கேள்வி! தெலுங்கு மீடியாவுக்கு விஜய் சேதுபதி கொடுத்த பதிலடி!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை விஜய் சேதுபதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு பேட்டி நிகழ்ச்சியில் கங்குவா திரைப்படம் குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு காட்டமாக பதிலளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


சமீபத்தில் விஜய் சேதுபதி தெலுங்கு பேட்டியில் விடுதலை-2 ப்ரோமோஷனுக்காக சென்றிருந்தார். அப்போது  தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர் கங்குவா திரைப்படத்தின் தோல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் சேதுபதி இவ்வாறு கட்டமாக பதிலளித்துள்ளார். 'நான் என் பட ப்ரோமோஷனுக்கு வந்திருக்கிறேன்.

இதை பற்றி நான் ஏன் பேச வேண்டும். எல்லா படமும் வெற்றி அடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் எடுக்கிறார்கள். ஒரு சின்ன ஹோட்டல் தொழிலாக இருந்தாலும் அது வெற்றி பெற என்கிற ஒரே நோக்கத்தில் தான் செய்வார்கள்.'நானும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன். ட்ரோல்களை பார்த்திருக்கிறேன்' என விஜய் சேதுபதி பதில் கொடுத்து இருக்கிறார். அந்த  வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


இந்நிலையில் இதனை ஷேர் செய்த அந்த பத்திரிக்கையாளர் தனது டுவிட் பக்கத்தில் எச்சரிக்கை: படம் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பிறகு  கங்குவா அடிப்படையிலான கருத்துகளுடன் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு உங்கள் மக்கள் செல்வன் கூறிய பதிலை பாருங்கள் என்று டுவிட் செய்து இந்த விடியோவை பதிவிட்டுள்ளார். இதற்கு தற்போது ரசிகர்கள் பலவாறு கமெண்ட் செய்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement