• Dec 26 2024

10 மணி நேரம் நிகழ்ச்சி முடிவடைந்தது.. நன்றி சொல்லி விடை பெற்ற விஜய்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் மாணவர்களுக்கு நடத்திய பாராட்டு விழா தொடர்ச்சியாக 10 மணி நேரம் நடந்த நிலையில் சற்று முன் அந்த நிகழ்ச்சியை முடிவடைந்தது. இதனை அடுத்து அவர் அனைவரிடமும் விடை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

10,12ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் நடத்திய பாராட்டு விழா மற்றும் பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது. ஒவ்வொரு மாணவருக்கும் விஜய் தானே தன்னுடைய கைகளால் பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களையும் சான்றிதழையும் வழங்கினார்.

இடையில் மதிய உணவுக்கு மட்டும் சில நிமிடங்கள் இடைவெளி விட்டு அதன் பின் மீண்டும் இந்த விழா நடந்தது என்பதும் மிகவும் கட்டுக்கோப்பாக ஒவ்வொரு மாணவ மாணவியரும் வரிசையில் வந்து விஜய் இடம் பாராட்டுக்களை பெற்று சென்றார்கள் என்பதும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இந்த நிகழ்ச்சியில் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் இந்த விழாவுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டதாகவும் மற்றும் டீ, காபி வழங்கப்பட்டதாகவும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அனைவரிடம் விடை பெற்றுக் கொண்டு நன்றி கூறி விஜய் தனது வீட்டிற்கு சென்றார். மேலும் தனது வீட்டருகே காத்திருந்த ரசிகர்களுக்கும் அவர் கை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு அதன் பின் உள்ளே சென்றார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement