• Dec 28 2024

விஜயாவுக்கு கிடைத்த கௌரவம்... பிளேட்டை திருப்பி போட்ட ரோகிணி! சிறகடிக்க ஆசையில் இன்று..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து மீனாவும் ரோகிணியின் ரூமில் தூங்கச் செல்கிறார்கள். அதன்போது மனோஜ் கதவை தட்டி ஒரு ஒரு சமனாக கேட்டுக் கொண்டு இருக்க, இறுதியில் எல்லா சாமானையும் கட்டி கொடுக்கிறார் முத்து

அதன்பின் தரையில் படுத்தால் தூக்கம் வராது என பேசிக் கொண்டு இருக்க, கொஞ்சம் பொறு மனோஜ், ஸ்ருதிய பத்தி நல்லா தெரியும், அவ இப்படி எல்லாம் தூங்கவே மாட்டா, கட்டாயம் பிரச்சினை பண்ணுவா அப்போ பாப்பம்  என சொல்லி தூங்க வைக்கிறார்.

மறுநாள் விடிந்ததும் தூக்கம் வராமல் விஜயாவிடம் தனக்கு மீண்டும் ரூமை பெற்றுத் தருமாறு கேட்கிறார் மனோஜ். அதற்கு விஜயா, இது உங்க பாட்டி சொன்னது தானே. உங்க அப்பாவும் அதை தான் சொல்லுவார் என மனோஜை சமாதானம் செய்கிறார்.


இதை தொடர்ந்து எல்லாரும் சாப்பிட இருக்க, மனோஜ் அங்கு இருந்தும் தூங்கி வழிகிறார். இதை பார்த்து எல்லாரும் சிரிக்கிறார்கள். பின்பு கடையை பற்றி கதை வர, யாரவது நடிகை ஒருவரை வைத்து தான் கடை திறக்க வேண்டும் அதற்கு 2 லட்சம் செலவாகும் என சொல்கிறார். 

இதன் போது விஜயாவின் முகம் மாறுகிறது.அதனை முத்து கவனிக்கிறார். மீனாவும் யாரும் நல்லா வாழ்ந்தவங்களை, உழைச்சு முன்னுக்கு வந்தவங்களை கூப்பிட்டு கடையை திறக்கலாம் என சொல்ல, அப்படி எல்லாம் செய்ய ஏலாது. பேமஸான ஒருவரை கூப்பிட்டு தான் கடையை திறக்கணும் என ரோகிணி சொல்கிறார்.

இறுதியாக அண்ணாமலை நீ நல்லா இருக்கனும் என்று உங்க அம்மா தான் கூட நினைச்சவ, அவள கூப்பிட்டு கடையை திற எல்லாம் நல்லதா நடக்கும் என சொல்ல, மனோஜ் ஜோசிக்கிறார். ஆனாலும் அது தான் சரியா இருக்கும் என ரோகிணி சொல்ல, மனோஜும் ஓகே என்று சொல்கிறார். இதனால் விஜயா சந்தோசப்படுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement