• Dec 26 2024

ஆட்டோமேட்டிக்கா விசில் போடு... 'கோட்' சிங்கிளில் மங்காத்தா, மாநாடு ரெஃபரன்ஸ்..?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாட்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை வெளியானது. குறித்த பாடல் விசில் போடு என ஆரம்பித்துள்ளதோடு இதனை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ராஜ விருந்தாகவே காணப்படுகிறது.

இவ்வாறு வெளியான இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதோடு இந்தப் பாடலுக்கு மதன் கார்த்தி வரிகளை எழுதியுள்ளார். அத்துடன் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார்.

மேலும், இந்த பாடலில் பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்று எடுத்த ஆரம்பத்திலேயே தனது அரசியல் வருகையை நினைவு படுத்தியுள்ளார் விஜய். இந்த பாட்டில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், விஜய் ஆகிய நான்கு பேரும் வெறித்தனமாக நடனமாடி கலக்கியுள்ளார்கள்.


இந்த நிலையில், 'தி கோட்' படத்தில் தற்போது வெளியான விசில் போடு பாடலில் அஜித் நடித்த மங்காத்தா படத்தின் ரெஃபரன்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதோடு,  இது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


அதாவது வெங்கட் பிரபு இயக்கும் படம் என்றாலே அதில் ஒரு தனித்துவமான சிறப்பு இருக்கும். அதே போல இந்த பாட்டிலும் சில சுவாரஸ்யமான அம்சங்களை சேர்த்துள்ளார் வெங்கட் பிரபு. 

அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே வெளியான படங்களின் கார்டுகளின் ஸ்டைலில் 'தி கோட்'  படத்தின் டைட்டிலை இந்தப் பாடலில் சேர்த்துள்ளாராம். அதன்படி சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, கோவா, மாஸ், மாநாடு, ஆகிய படங்களின் டைட்டில் கார்டுகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் டைட்டில் கார்ட் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை மேலும் கவனிக்கச் செய்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement