• Dec 25 2024

இனிமே எங்களுக்கு யாரு இருக்கா.. கதறி அழுத போண்டா மணியின் மகன்- கடும் சோகத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கை நாட்டை பூர்வீகமாகக் கொண்ட காமெடி நடிகர் தான் போண்டாமணி.பாக்கியாராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தில் நடித்து 1991ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானவர்.

இவர் வடிவேலு, விவேக் சந்தானம் என பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 


தனது மருத்துவ செலவுக்கு உதவுமாறு பல நடிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய்சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் அவருக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.

இந்நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.நடிகர் போண்டா மணியின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இந்த நிலையில் இது குறித்து அவரது மகன் கூறியதாவது,அப்பா மயங்கின போது ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனோம். ஆனால் உங்க அப்பா இறந்துட்டாருப்பா என்று சொன்னாங்க என கூறியபடி பதறி அழுதுள்ளார்.இப்போ எங்களுக்குன்னு யாருமே இல்லை. அரசாங்கமோ அல்லது நடிகர் சங்கமோ தான் உதவி செய்ய வேண்டும் என போண்டா மணியின் மகன் அழுதபடியே கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement