• Dec 26 2024

மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்த விஜய்சேதுபதி.. அப்படியே நிலைமை தலைகீழா மாறிடுச்சு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு படம் நடித்து ரிலீஸ் செய்த நிலையில் தற்போது அவரது படங்களின் எண்ணிக்கை தலைகீழாக மாறி மிகக்குறைந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021 ஆம் ஆண்டு 9 படங்கள் ரிலீஸ் செய்தார் என்பதும் அதில் ’மாஸ்டர்’ ’உப்பன்னா’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும், இரண்டுமே அவர் வில்லனாக நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ’பேட்ட’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’ஜவான்’ உள்ளிட்ட படங்கள் மட்டுமே நல்ல வெற்றி பெற்றது என்பதும் நெகட்டிவ் வேடத்தில் நடித்த ’விடுதலை’ கூட நல்ல வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஹீரோவாக நடித்த ’லாபம்’ ’துக்ளக் தர்பார்’ ’அன்னபெல்லா சேதுபதி’ ’மாமனிதன்’ ’டிஎஸ்பி’ ’மைக்கேல்’ ’மெர்ரி கிறிஸ்மஸ்’ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டர், சிறப்பு தோற்றம் என கிடைக்கும் கேரக்டர்களில் எல்லாம் அவர் நடித்ததால் தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பு குறைந்து விட்டது என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவரது மேடைப்பேச்சில் இருந்த ஆட்டிட்யூட் அவரது மார்க்கெட் சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாதத்துக்கு ஒரு படம் ரிலீஸ் செய்து பிஸியாக இருந்த விஜய் சேதுபதி தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து கொண்டு இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ’மகாராஜா’ ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே தற்போது அவர் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து வேறு படங்களில் அவர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்க தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில் அவர் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் என்றால் அது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படம் தான், அதன்பின் அவர் கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இனி அவர் தனது ரூட்டை மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement