• Apr 19 2026

சிவாஜி பெயரை காப்பாற்றுவாரா SK.? கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்.! வைரலான பதிவு

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீப காலமாக புதிய படங்கள் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசும் கருத்துகள், உரையாடல்கள் போன்றவை விரைவாக வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்குவது வழக்கம் ஆகிவிட்டது.

அதில் சமீபத்தில் நடந்த சம்பவம், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது பராசக்தி படத்துடனான தொடர்பில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் பராசக்தி, ஜனவரி 10ஆம் தேதி உலகமக்கள் பார்வைக்கு வருகிறது. இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்ற முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த படம், தனது கதைக்களம், ஸ்டைலிஷ் இயக்கம் மற்றும் நடிப்பு காரணமாக, மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற செய்திகள் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாளை, பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இந்த விழா, ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை உலக பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களிடையே  பெரும் கவனத்தை செலுத்தும் விழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், ஒரு தனியார் ஊடகம் வழங்கிய விருது விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், பராசக்தி என்ற படத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “பராசக்தி என்பது பவர்ஃபுல்லான டைட்டில். சிவாஜி மாதிரி யாராலும் நடிக்க முடியாது. ஆனால் அவர் பெயரை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.”

இந்த கருத்து, சில சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியது. சிலர், “சிவாஜி பெயரை பயன்படுத்துவது எவ்வாறு சரி?” என்ற வாதங்களுடன், சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்த சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்துள்ளார். அவர் அதன்போது, “திடீர் நடிகர் திலகமாக மாற நினைத்த சிவகார்த்திகேயன்..” என்று நக்கலாக கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement