• Dec 28 2024

நீ பைத்தியக்காரன்.. உங்க அம்மாவ அசிங்கப்படுத்த விரும்பல..! ஆவேசத்தில் ஷகிலா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பத்திரிகையாளராகவும் திகழ்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிகர், நடிகைகள் பற்றி தெரிந்த விஷயங்கள் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் இடம் பெற்ற அந்தரங்க ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதன் மூலம் காசு பார்த்து வருகின்றார். இவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய இஷ்டத்துக்கு பேசி வருகின்றார்.

சமீபத்தில் கலைஞர் டிவியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவரை ஷகிலா வெளுத்து வாங்கியிருந்தார். இதன் போது பயில்வான் மகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்து இருந்தார். அது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


இதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்த பயில்வான், அந்த நிகழ்ச்சியில் ஷகிலா தான் என்னிடம் தேவையில்லாத வார்த்தைகளை விட்டார். நான் பேசிய பல விஷயங்களை அந்த நிகழ்சியில் எடிட் செய்து தான் ஒளிபரப்பினார்கள். நான் ஷகிலாவின் பொண்ணுக்கும் அவருக்கும் நடந்த சண்டை பற்றி கேட்க, அவர் என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேசினார். நான் என்ட குடும்பத்தோடு சந்தோஷமாக உள்ளேன். எனக்கு குடும்பம் இருக்கு. ஆனா சகிலாவுக்கு குடும்பம் இருக்குதா? அவர் அப்படி வாழ்கின்றாரா? என பேசிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பயில்வானின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த ஷகிலா, என்னைப் பற்றி அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தையால் பயில்வான் பேசி இருந்தார். அதற்கு நான் உடனே பதில் அளித்து இருப்பேன் வெளிநாட்டில் இருந்ததால் பதில் அளிக்க முடியவில்லை. மற்றவர்களுடைய குடும்பத்தில் என்ன நடக்குது என்று எட்டிப் பார்க்கும் வேலையைத்தான் நீ பார்த்துக் கொண்டுள்ளாய். நீ பயில்வான் ரங்கநாதன் இல்லை. நீ பயில்வான் பைத்தியக்காரன். நீ சொன்னகெட்ட வார்த்தையை உனக்கு சொல்லி திட்ட எனக்கு ஐஞ்சு நிமிஷம் ஆகாது ஆனால் நான் உங்க அம்மாவ அசிங்கப்படுத்த விரும்பவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார் ஷகிலா.

Advertisement

Advertisement