• Dec 26 2024

கவிதை சொல்லியே எல்லாரையும் ஓடவிடப் போறாரு..! பிக் பாஸ் 8ல் களமிறங்கும் பிரபல நடிகர்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக காணப்படுவது தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது ஏழு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் எட்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இவர் வார இறுதியில் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமை என்றாலே ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு காணப்படுவார்கள்.

ஆனாலும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாக உள்ள நிலையில் பட வாய்ப்புகளினால் கமலஹாசன் பிஸியாக இருப்பதாக இதிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறி இருந்தார். இதை தொடர்ந்து அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி பிக் பாஸ் எட்டாவது சீசனை  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.


இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய ஒரு சில தகவல்கள் நாளாந்தம் வெளியானவாறே உள்ளன. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனில் குக் வித் கோமாளி யில் கலக்கி வரும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் நடுவராக பங்கேற்று மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று  வருகின்றார்.


அதேபோல தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், வினியோகஸ்தராகவும் பன்முகம் கொண்டு விளங்கி வரும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்  கவிதை நடையிலேயே பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்சை  புரட்டி எடுக்க போகின்றார் என்று இணையத்தில் மீம்ஸ்கள்  வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement