• Dec 27 2024

ஜீ தமிழில் புதிதாக களமிறங்கும் புது சீரியல்.. ஹீரோயின் கதை இதுவா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றார்கள். விஜய் டிவியில் அண்மையில் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து தற்போது வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியல் ஒளிபரப்பாகி  வருகிறது. அதுபோலவே சன் டிவியிலும் 12 சீரியல்கள் புதிதாக அடுத்தடுத்து ஒளிபரப்பாக உள்ளன.

இந்த நிலையில்,  தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஜீ  தமிழில் லட்சுமி கல்யாணம் என்ற சீரியல் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது.


குறித்த ப்ரோமோவில், எல்லோருக்கும் நல்லது செய்யும் பெண்ணாக ஹீரோயின் அறிமுகப்படுத்தப்படுகிறார். அத்துடன் ரோட்டில் செல்பவர்களுக்கு, காய்ந்து போன செடிக்கு, குடும்பத்தினருக்கு என ஓடி ஓடி உதவி செய்யும் மனப்பாங்கு உடையவராக காணப்படுகிறார். இந்த சீரியல் அவரைப் பற்றியதாகவே காணப்படுகிறது. இதோ அந்தப் ப்ரோமோ,


Advertisement

Advertisement