சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் விஜய் டிவி, சன் டிவிக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும்பாலும் நான்கு, ஐந்து வருடங்களுக்கு இழுபடாமல் ஓரிரு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிடுகின்றன. அதிலும் இந்த சேனலில் வித்தியாசமான கதைக்களங்களில் சீரியல்கள் ஒளிபரப்பாவது வழமை.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நினைத்தேன் வந்தாய் சீரியல் கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வரவுள்ளது.
நினைத்தேன் வந்தாய் சீரியலில் காதல், எமோஷனல் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாந்திரீகம் என அனைத்தும் கலந்த ஜானரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த சீரியல் இதுவரையில் 250 எபிசோடுகளை தான் பூர்த்தி செய்துள்ளது.
இவ்வாறான நிலையில் நினைத்தேன் வந்தாய் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சீரியலில் மனோகரியின் உண்மையான சுயரூபங்கள் அத்தனையையும் சுடர் கண்டுபிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து எழிலிடம் எல்லாவற்றையும் நிரூபித்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
மேலும் இந்துமதியின் உண்மையான தங்கச்சி சுடர்தான் என்பதை ஏற்கனவே எழில் அறிந்துள்ளார். பிள்ளைகளும் சுடரை அம்மாவாக ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது இந்த சீரியல் இறுதி அத்தியாயத்தில் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!