தமிழ் சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்த தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ராயன். இந்த படம் விமர்சன ரீதியாக பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் வசூலில் 100 கோடி ரூபாயை அள்ளி இருந்தது.
இதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி நடித்து வருகின்றார் தனுஷ். அதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் 2கே கிட்ஸின் காதலை பற்றி பேசும் படமாக காணப்படுகின்றது.
மேலும் தனுஷ் இயக்கும் நான்காவது படமாக இட்லி கடை படம் காணப்படுகிறது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் தனுஷ் அவருக்கே ஏற்ற வகையில் கிராமத்து நபராக, ஒரு வியாபாரியாக காட்சியளிக்கின்றார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகின்றது.
Listen News!