• Dec 25 2024

படுத்த படுக்கையாய் கிடக்கும் ஷாலினி.. இன்னும் சரி ஆகலையா? மகன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காதல் ஜோடியாக இன்றுவரை திகழ்ந்து வருபவர்கள் தான் அஜித் - ஷாலினி ஜோடி. இவர்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

அமர்க்களம் என்ற படத்தில் ஒன்றாக நடித்த இவர்களுக்கு அதில் இருந்து காதல் மலர்ந்தது. இந்த படம் முடிந்த கையோடு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட பின்பு சினிமா துறையில் இருந்து மொத்தமாக விலகிய ஷாலினி, தனது குடும்பம், குழந்தை என குடும்பப் பெண்ணாகவே மாறி அனைத்தையும் கவனித்து வருகின்றார். இதனால் அஜித் நிம்மதியாக இருப்பதோடு அவரும் சினிமா, பிசினஸில் கவனம் செலுத்தி வருகின்றார்.


சமீபத்தில் ஷாலினிக்கு ஒரு மைனர் சர்ஜரி நடந்துள்ளது. அந்த நேரத்தில் அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்காக அஜர்பஜானில் இருந்துள்ளார். ஆனாலும் அடுத்த நாளே ஷாலினியை பார்ப்பதற்காக ஓடோடி சென்னைக்கு வந்தார். அதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மிகவும் வைரலானது.

இந்த நிலையில்,  இன்னும் முழுமையாக உடல்நிலை தேராத ஷாலினியை அவரது மகன் ஆத்விக் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் ஷாலினி. குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement