• Dec 26 2024

தமிழ் ராக்கர்ஸ் அட்மினை பிடிக்க உதவியது பிரபல நடிகரின் மனைவியா? பரபரப்பு தகவல்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய உதவி செய்தது பிரபல நடிகரின் மனைவி என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து ரகசிய புகார் அளிக்கப்பட்ட நிலையில் தியேட்டரில் கையும் களவுமாக அந்த நபர் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் தியேட்டரில் வீடியோ எடுத்து அதனை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஐயாயிரம் ரூபாய் பணத்திற்காக வெளியிட்டு வருவார் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் மட்டுமின்றி டெலிகிராம் சமூக வலைதளத்திலும் அவர் புதிய படங்களை பதிவேற்று வருவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் திருவனந்தபுரம் தியேட்டரில் யாருக்கும் தெரியாமல் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்ததை பிரபல நடிகர் ஒருவர் மனைவி தான் பார்த்து ரகசியமாக போலீசாருக்கு புகார் அளித்ததாக தெரிகிறது. அவர்தான் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் அதிரடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து தற்போது தமிழ் ராக்கர்ஸ் முக்கிய அட்மினை கைது செய்துள்ளனர். இவருடைய கூட்டாளிகள் 11 பேர் இருக்கிறார்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement