• Dec 26 2024

பிளாட்பாரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி.. கேபிஒய் பாலா செய்த தரமான செயல்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா கடந்த சில ஆண்டுகளாக தனது சொந்த பணத்தை சமூக சேவை செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் உதவி செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயார் உடன் பிளாட்பாரத்தில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் படிப்பை இடையில் நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

இதை அறிந்த பாலா அந்த கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவர் தங்கியிருந்த பிளாட்பாரம் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டிய பணத்தை கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு ‘உங்களை மாதிரி எல்லோரும் இருந்தால் ஏழைகளே உலகத்தில் இருக்க மாட்டார்கள்’ என்றும், ’அந்த மாணவி கல்லூரியில் நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டும்’ என்றும் ’சீக்கிரமே பாலா ஒரு கல்லூரி கட்டி அதில் இலவச கல்வியை இது போன்ற நபர்களுக்கு தர வேண்டும்’ என்றும் ’வாழும் அன்னை தெரசா’ என்றும் ’தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மனிதன்’ என்றும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement