• Dec 26 2024

அரசியல் படம் வேண்டாம்.. எச்.வினோத்துக்கு திடீர் உத்தரவு போட்ட விஜய்.. ‘தளபதி 69’ என்ன ஆகும்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்றும் இது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றும் கூறப்பட்டது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் தனது கடைசி படம் ஒரு அதிரடி அரசியல் படமாகவும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசியல் தலைவர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

விஜய்க்கு இந்த படம் அவரது அரசியல் வாழ்க்கைக்கு பெரிதும் உதவி செய்யும் வகையில் இருக்கும் என்றும் அந்த வகையான ஸ்கிரிப்ட் தான் எச் வினோத் எழுதியுள்ளார்  என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது திடீரென விஜய் தனது முடிவில் மாற்றம் செய்து கொண்டதாகவும் ’தளபதி 69’  திரைப்படம் அரசியல் படம் வேண்டாம் என்றும் வேறு புதிதாக ஒரு கதையை தயார் செய்ய இயக்குனர் எச் வினோத்துக்கு அவர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அந்த அரசியல் கதையை ஓரமாக வைத்துவிட்டு தற்போது புதிய கதையை எழுதும் பணியில் இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த பணி முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

’தளபதி 69’ திரைப்படம் ஒரு அரசியல் படம் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஜய்யின் முடிவில் மாற்றம் ஏன் வந்தது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ’தளபதி 69’ படத்தில் அவரை ஒரு அரசியல்வாதியாகவும் முதலமைச்சராகவும் பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்ட நிலையில் திடீரென விஜய் வழக்கமான ஒரு ஆக்சன் கதையை தேர்வு செய்வாரா? அல்லது தாய்க்குலங்களையும் கவரும் வகையில் ஒரு சென்டிமென்ட் கதையை தேர்வு செய்வாரா? அல்லது மாணவ, மாணவிகளை கவரும் வகையில் ஒரு கதையை தேர்வு செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement