• Dec 26 2024

மரியாதையா நடந்து கொள்ளுங்க.. விவாகரத்து எனது பர்சனல்! சமந்தா கொடுத்த பதிலடி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கானாவில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஷயமாக நாக சைதன்யா சமந்தாவின் விவாகரத்துக்கு கேடிஆர்  தான் காரணம் என தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர்  தெரிவித்த விடயம் தான். இந்த விடயம் தற்போது காட்டு தீ போல இணையத்தில் பரவி வருகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் ஆந்திராவின் பல பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாகவே மாறியது. எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்த இவர்கள், 2021 ஆம் ஆண்டு பரஸ்பரமாக பேசி விவாகரத்து செய்தார்கள். நாக சைதன்யா 100 கோடியை ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் சமந்தா அதனை நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை நாக சைதன்யாவின் அப்பா நடிகர் நாகர்ஜுனா  வெளியிட்டார். மேலும் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்த நாள் சமந்தா தனது காதலை நாக சைதன்யாவிடம் கூறிய நாள் எனவும் கூறப்படுகின்றது.


இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு பெண்ணாக இருக்க, வீட்டில் இருந்து வெளியே வந்து வேலை செய்ய, பெண்களை பொருட்களை போல் நடத்துகின்ற பலர் கவனத்தை ஈர்க்கும் துறையில் வாழ, காதலிக்க, காதலில் இருந்து வெளியே வர, இன்னும் அழுது நின்று சண்டையிட என அளவிற்கும் தைரியமும் வலிமையும் தேவை. எனது இந்தப் பயணம் என்னை மாற்றி இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் தயவு செய்து அதை சிறுமைப்படுத்தாதீர்கள்.

ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியும். தனி நபர்களின் தனிப்பட்ட விஷயங்கள் மீது மரியாதையுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம் அதை ஊடகங்களில் பேசுவதை தவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

எனது சொந்த விஷயங்கள் தவறாக சித்தரிக்கப்படுவதை தெளிவுபடுத்துவதற்காக கூறுகின்றேன். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது. எனது விவாகரத்தில் எந்த அரசியலும் இல்லை. உங்களுடைய அரசியல் தன்மைகளுக்கு எனது பெயரை பயன்படுத்த வேண்டாம். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவே இருக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement