• Dec 27 2024

நடிக்க ஓகே சொன்ன சிவாஜியை ரிஜெக்ட் செய்த சேரன்!.. இதுதான் காரணமா...?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்க கிடைக்கும் வாய்ப்பை யார் தான் வேண்டாம் என்பார்கள். ஆனால் அப்படி அருமையாக கிடைத்த ஒரு வாய்ப்பை வேண்டாம் என சேரனே சொல்லிவிட்டாராம். 

அப்போது நடந்த பேச்சுவார்த்தையை பேட்டியாகவே கூறி இருக்கிறார் சேரன். அதன்படி அவர் கூறுகையில்,

தேசிய கீதம் படத்துக்கு என் முதல் சாய்ஸ் சிவாஜி கணேசன் சார் தான். கதையை நேரில் போய் சொன்னேன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர படத்தினை கதையையும் சீன் வாரியாக சொன்னேன்.


அதை பொறுமையாக கேட்டார். உணர்ச்சியான சீன்களில் அவர் கண்ணே அத்தனை கதை பேசியது. முழு கதையையும் அவர் கேட்டு முடித்த பின்னர் என்ன சொல்லுவார் என ஆவலாக காத்து இருந்தேன். 

இதன்போது பேசிய சிவாஜி சார், நல்ல கதையாக தான் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், என் நண்பன் கக்கன் மாதிரி நல்ல மனுஷங்க அரசியல்ல இருந்த காலமெல்லாம் எங்கடா போச்சுன்னு கேக்க நினைக்கிறதானே. சரி நான் நிச்சயமா நடிக்கிறேன் எனச் சொன்னதும் எனக்கே ஆச்சரியமாகி விட்டது. 


அவர் அதோடு நில்லாமல் கிளைமாக்ஸ் காட்சியை நடிக்க தயாரானார். அந்த வயதில் கூட கெத்தாக நின்றார். நான் இப்படி நிற்கிறேன். நீ பேனை போடு. என் தாடி, முடியெல்லாம் பறக்கும். என் கண்ணு செவக்குது. கன்னம் துடிக்குது. எனக்கு நேரா இருக்கவங்கள பாத்து இதுக்காடா நாங்க கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்குனோம் என அழுகையும் ஆத்திரமுமாக கேட்கிறேன்.

இந்த சீன் எப்படி? நல்லா இருக்கா என்றார். எனக்கே புல்லரித்து விட்டது. அவரே ஓகே சொன்னால் கூட அந்த படம் முழுவதும் படமாக்கப்பட்டது காரைக்குடியில் தான். அது கொளுத்தும் வெயில் நேரம் வேறு. அந்த சமயத்தில் சிவாஜிக்கு உடல்நலம் வேறு சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார். என்னால் அவர் கஷ்டப்பட கூடாது என்பதால் நானே அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன் என்றார்.

Advertisement

Advertisement