தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக உருவெடுத்து வரும் சாரா அர்ஜுன் குறித்து, பிரபல இயக்குநர் ஏ. எல். விஜய் பகிர்ந்துள்ள உருக்கமான கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்திய ஒரு பேட்டியில், சாரா அர்ஜுன் குறித்து பேசும்போது இயக்குநர் ஏ. எல். விஜய் உணர்ச்சி வசப்பட்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் அதன்போது, “சாரா அர்ஜுன் என்னுடைய மகள் மாதிரி தான். ஒவ்வொரு முறையும் தேர்வு முடிந்து விடுமுறை விடும் போதும் என் வீட்டிற்கு வருவாள். என்னுடைய மகள் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆனது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவள் என்னை மாமா என அழைத்தாலும், அவள் எனக்கு மகள் தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகள் ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளன. ஒரு இயக்குநர் – நடிகை உறவை தாண்டி, குடும்ப பாசத்துடன் பேசப்பட்ட இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
சாரா அர்ஜுன் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். குறிப்பாக, ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான "தெய்வத் திருமகள்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பரவலான கவனத்தை பெற்றார். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு மற்றும் உணர்ச்சி பூர்வமான காட்சிகள் பலரையும் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, ஏ. எல். விஜய் இயக்கிய "சைவம்" படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இந்த இரண்டு படங்களும் சாரா அர்ஜுனின் கலை பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தன.
Listen News!