• Dec 27 2024

சர்க்கார் படத்துல நம்ம முத்து என்ன செய்து இருக்கார் தெரியுமா? இதுவரை யாருக்கும் தெரியாத விடயம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் முத்துவாக நடிகர் வெற்றி வசந்தும், மீனாவாக நடிகை கோமதி பிரியாவும் நடித்து வருகின்றார்கள்.

தமிழில் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் ரீமேக் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் தற்போது பாட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு நகை வாங்குவதற்காக முத்துவும் மீனாவும் நகை கடைக்கு செல்கின்றார்கள். அங்கு தனது நகையை கொடுத்த மீனாவுக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அதாவது அந்த நகை கவரிங் நகை என தெரிய வருகின்றது. 


இந்த காரணத்தால் இந்த விஷயத்தை மனோஜ் மட்டும் தான் செய்திருப்பான் என முத்து உறுதியாக நம்புகிறார். ஆனாலும் பாட்டியின் பிறந்தநாள் சந்தோஷமாக முடிய மட்டும் இதில் எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம் என மீனா முத்துவிடம் சத்தியம் வாங்குகிறார்.

இந்த நிலையில், தற்போது வெற்றி வசந்த் அளித்த பேட்டி ஒன்றில் தான் சர்கார் படத்திலும் வேலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க முன்னர் நான் நிறைய வேலைகள் செய்துள்ளேன். அதன்படி அசிஸ்டன்ட் டைரக்டர் ஆக இருந்துள்ளேன். வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட், யூட்டிப்பில் டைரக்ஷன், செட் அசிஸ்டன்ட் , சர்க்கார் படத்துல கூட எஸ்கார்ட் டீம்ல ஒரு 15 நாள் வொர்க் பண்ணியிருக்கேன். சிவா அண்ணா படத்துல செக்யூரிட்டியா இருந்திருக்கேன். இதுபோல நிறைய வேலைகள் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement