திரையுலகில் டைமிங் காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகர் சதீஷ். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர், தனது இயல்பான உடல்மொழி, முகபாவனை மற்றும் டயலாக் டெலிவரியால் குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.
காலப்போக்கில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும், சமீபகாலமாக கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் சதீஷ். இதன் மூலம், தன்னை ஒரு முழுமையான நடிகராக நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சதீஷ் தற்போது இயக்குநர் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். காமெடியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படம், ரசிகர்களிடையே ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில், நடிகர் ஆதிசாய்குமார் மற்றும் நடிகை சரண்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், இந்த திரைப்படத்தை எஸ்ஜிஎஸ் (SGS) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ்குமார் தயாரித்து வருகிறார்.
இந் நிலையில், இந்த திரைப்படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு “பத்து நாள் ராஜா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்பு வெளியான உடனேயே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!