ஒரு காலகட்டத்தில் முக்கிய நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகை சங்கீதா. இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம் என பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திய இவர், இன்று திரையுலகில் இருந்து ஓரளவு விலகியிருந்தாலும், அவ்வப்போது தனது நேர்மையான பேச்சுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் நடிகை சங்கீதா தனது கணவர் கிரிஷ் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட கருத்துகள், சமூக வலைத்தளங்களில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

ஒரு நேர்காணலில் பேசும்போது, நடிகை சங்கீதா, தனது திரையுலக வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் நேர்மையாக மனம் திறந்து பேசினார்.
அதாவது, " நான் சினிமாவில இத்தனை வருசமா இருந்து இருக்கேன். ஆனா, எந்த நடிகர் மேலையும் எனக்கு காதல் வரல.. ஆனா, கிரிஷ் மீது ஏன் வந்ததுன்னா... எனக்கு பாடவே சுத்தமா வராது. எனக்கு பேரில மட்டும் தான் சங்கீதம் இருக்கு. ஆனா, எனக்கு சங்கீதமே வராது.. அதனால பாடுறவங்க மேல எனக்கு பயங்கர மரியாதை இருந்தது. அந்த மரியாதையால தான் கிரிஷ் இன்னைக்கு என்ர கணவரா இருக்கிறார்." என்று கூறியிருந்தார்.
நடிகை சங்கீதாவின் இந்த பேச்சு, திறமை மீது வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது. அத்துடன் இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!