Sun Pictures தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, உலகளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதற்கு முன்பு வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், 'ஜெயிலர்' படம் ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில், 'ஜெயிலர் 2' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
முதல் பாகம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, 'ஜெயிலர் 2' அதைவிட அதிக வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். தற்போது போஸ்ட்-பிரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!