தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பேரரசு, சமீபத்தில் இளையராஜா பாடல்களை ஒளிப்பரப்புவதற்கு ஏற்படும் Copy Rights பிரச்சினை குறித்து தனது அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, "இளையராஜா பாடல் கேட்டாலே இப்போ பயமாக இருக்கிறது. அவர் பாடலை பயன்படுத்தினால் Copy Rights பிரச்சனை வருமா என்று எல்லாரும் யோசிக்கிறார்கள். இதுக்கு எல்லாம் பயப்படக் கூடாது!" என்றார்.
இந்த கருத்து, தற்போது தமிழ் திரையுலகில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளராக பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் குடியிருப்பவர். அத்தகைய இளையராஜா இசையமைத்த பாடல்களை, திரைப்படங்களில் மீண்டும் பயன்படுத்த Copy Rights பிரச்சனை ஏற்பட்டதாக பலர் கூறி வருகின்றனர்.
சில திரைப்படங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த அவருடைய குழுவினரிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்பதால், இது பல இடங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மேலும் சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்த தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மாஸ், சென்டிமென்ட் மற்றும் குடும்பப் படங்களை இயக்குவதில் பிரபலமானவர். அவர் Copy Rights பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்கையில் "இளையராஜா பாடல்களை பாடினால் அல்லது பயன்படுத்தினால் Copy Rights பிரச்சனை ஏற்படுகிறது என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது" என்றார். இயக்குநர் பேரரசு "இளையராஜா பாடலை கேட்டால் பயமாக இருக்கிறது" என நக்கலாக கூறிய கருத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
Listen News!