• Mar 04 2025

" இவர் தனுஷை காபி அடிக்கின்றார்..?" பதிலடி கொடுத்த பிரதீப் ரங்கநாதன்...

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதனும் ஒருவர் கோமாளி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் "லவ் டுடே " எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தினை நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.


இதன் பின்னர் தற்போது தனது நன்பன் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "dragon " எனும் படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றார். இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது. வெளியாகி 3 நாளில் 100 கோடி வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் பிரதீப் தற்போது நீங்கள் தனுஷ்ஷை காபி அடிக்கிறீர்களா? என்கின்ற கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் குறித்த கேள்விக்கு "ஸ்கிரீன்ல பார்ப்பதற்கு நான் தனுஷ் சாரை காபி அடிப்பது போல் இருக்கு என்று சொல்கிறார்கள். நான் அவரை இமிடெட் பண்ண ட்ரை பண்ணல. ஒருவேளை என்னுடைய முகமும், நான் உடல் ரீதியாகவும் அவரை போல் இருக்கலாம். கண்ணாடியில் பார்க்கும்போது எனக்கு என் முகம் தான் தெரிகிறது. அதேபோல், என்னுடைய இரண்டு படங்களும் தற்போது வரை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால், நான் நன்றாக நடிக்கிறேன் என்று நினைக்கிறேன்." என கூறியுள்ளார்.


மற்றும் இவரது முதலாவது படமான "லவ் டுடே " படத்தில் முதலில் தனுஷை நடிப்பதற்கு கேடுள்ளதாகவும் அவர் தான் திருச்சிற்றம்பலம் படத்தில் பிஸியாக இருப்பதாக மறுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement