• Jul 31 2025

மீண்டும் இணையும் பாண்டிராஜ் – விஜய் சேதுபதி கூட்டணி.! படக்குழுவின் புதிய அப்டேட் இதோ.!

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சிறந்த கதைகளின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ள இயக்குநர் பாண்டிராஜ், கடந்த ஜூலை 25ம் தேதி வெளியான "தலைவன் தலைவி" திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக முன்னேறினார்.

இந்த படத்தில் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் விஜய் சேதுபதி. அவருடைய செயல்பாடும், இயக்குநரின் கதையாக்கமும் ரசிகர்களின் அன்பைப் பெற்றன.


இந்த வெற்றிக்குப் பின், மீண்டும் ஒருமுறை பாண்டிராஜ் – விஜய் சேதுபதி கூட்டணி இணைகிறது என்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக தற்போது இணையத்தில் பரவியுள்ளது. மேலும், இந்த புதிய படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பெருமையுடன் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த புதிய முயற்சியில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஜெய் பீம் படம் மூலம் பிரபலமான மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். மேலும், இப்படம் கிழக்கு சீமையிலே போல “மாமன் – மச்சான்” உறவுகளை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.


Advertisement

Advertisement