• Dec 25 2024

நான் என்ன நல்லது பண்ணினேன்னு தெரியல... திடீரென எல்லாம் மாறிட்டு! குழந்தை பிறந்ததும் இர்பான் பதிவு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் பிரபல யூட்யூபராக காணப்படுபவர் தான் இர்பான்.  இவரை பல்லாயிரக்கணக்கானோர் யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றார்கள்.

சமீபத்தில் தனது மனைவி வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை விழா வைத்து அறிவித்திருந்தார். இந்த பங்க்ஷன் துபாயில் நடைபெற்ற போதிலும் சில சட்ட சிக்கல்களில் சிக்கியிருந்தார் இர்பான்.

இந்த நிலையில் பிரபல யூட்யூபர் இர்பான் அறிவித்தபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


அதன்படி அவர் குறிப்பிடுகையில், திடீரென்று என்னுடைய வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது. என் இளவரசி இங்கே இருக்கின்றாள். எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் என்ன நல்லது பண்ணினேன்னு தெரியல.. 

எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைத்துள்ளது. என்னுடைய மகிழ்ச்சியை எல்லாம் என்னுடைய மனைவிக்கே திருப்பிக் கொடுக்கப் போகின்றேன். இந்த அதிசயம் எங்கள் வீட்டில் கிடைத்ததால் எங்கள் குடும்பம் வளர்ந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement