• Dec 26 2024

அம்பானி வீட்டில் ரஜினி ஆடிய டான்ஸ் தேசக்குற்றம்? காட்டமாக பதிலளித்த பேரரசு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கடந்த ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் இந்திய நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பல பிரபலங்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

அதன்படி இந்த திருமணத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான்,  அமீர்கான், ஆலியா பட், அனன்யா பாண்டே, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, வருண் தவான், அனில் கபூர், அட்லி மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டது மட்டும் இல்லாமல் அங்கு டான்ஸ் ஆடி பலரையும் அசர வைத்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவி பலரும் பலவிதமாக கருத்து தெரிவிக்க காரணமாக அமைந்தது.


இந்த நிலையில் இயக்குனர் பேரரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானி திருமணத்தில் நடனம் ஆடியது தொடர்பாக விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் என்றாலும் அவரும் ஒரு சாதாரண மனிதன் தானே. அவருக்கும் ஆதங்கம் இருக்கலாம். அம்பானி வீட்டில் அனைவரும் ஆடும்போது அவரும் ஆடினார். இதனை தேச குற்றம் என்பது போல ரஜினி எப்படி ஆடலாம் என  கேட்கின்றார்கள் வேண்டும் ஆனால் நீயும் போய் ஆடு.

ஒரு நடிகன் என்றால் எப்போதும் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கையில் முத்திரை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? சில இடங்களில் அவரையும் சராசரி மனிதனாக வாழ விடுங்கள். இதையெல்லாம் விமர்சனம் செய்யாதீர்கள் இந்த விமர்சனங்களை பார்க்கும்போது ரஜினி கூனிக் குறுகுவார். நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கு அது பற்றி யாரும் பேச மாட்டார்கள் என தனது காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement