• Dec 28 2024

சிறுவயதில் தெரிந்திருந்தால் குணப்படுத்தியிருக்கலாம்! தனக்கு இருக்கும் நோய் பற்றி ஓபனாக சொன்ன பகத் பாசில்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வழக்கமாகவே ஏதாவது நோய்கள் வருவதும் அதை அவர்கள் வெளியில் தெரியாமல் மறைப்பதும் உண்டு. ஆனால் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் தனக்கு இருக்கும் நோய் பற்றி ஓபனாக பேசியுள்ளார். 


மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில் ஆவார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் இவர் தமிழில் கமலுடன் இணைந்து நடித்த விக்ரம் படத்தின் மூலம் பிரபலமானார். இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் கூறிய தகவல் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


நடிகர் பகத் பாசிலுக்கு ஏ.டி.ஹெச்.டி (கவனக்குறைவு பாதிப்பு) மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டதாக அறிவிக்க பட்ட நிலையில் இதுகுறித்து அவர் பேசுகையில் "சிறு வயதிலேயே இதைக் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும், 41 வயதில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டுள்ளேன்" என கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement