• Jan 11 2025

ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு அவர் தான் காரணமா? வெடித்த பூகம்பம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பற்றிய பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் வகைகளில் ஜெயம்ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவர்களுடைய விவாகரத்துக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமாக இவர்களுடைய விவாகரத்துக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம்  சுஜாதாவின் வளர்ப்பு மகன் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ஜெயம் ரவி  விவாகரத்துக்கான காரணத்தை வெளியிடவில்லை. இதனால் இதற்கு முதல் இவர்களுடைய விவாகரத்து செய்தி வெளியான போதே பத்திரிக்கையாளர்கள் சில youtube சேனல்களில் அதற்கான காரணத்தை வெளியிட்டு வந்தார்கள்.

அதன்படி பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்தபடி பேட்டி ஒன்றில், ஜெயம்ரவியின் விவாகரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு ஷங்கர் என்ற  வளர்ப்பு மகள் உள்ளார்.


சுஜாதா நடத்திவரும் நிறுவனத்தை அவருடைய வளர்ப்பு மகன் தான் நிர்வாகித்து வருகின்றார். அப்படி அண்மையில் ஜெயம் ரவியை வைத்து தாங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் படம் எடுக்க இருந்தார்.

அதில் சுஜாதா தான் தன் வளர்ப்பு மகன் சங்கர் சொல்வதை ரவி கேட்டு நடக்க வேண்டும் என ஆர்டர் போட்டுள்ளார். இது ரவிக்கு பிடிக்காமல் அவர் தனது மனைவியிடம் சண்டை போட்டு அது பின்பு ஈகோ மோதலாக மாறி பிரச்சனை பெரிதாகி இருவரும் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார்கள்.

அதேபோல பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றிலும் ஜெயம் ரவி தனது மாமியார் தயாரிப்பில் சைரன் படத்தில் நடித்தார். அது ஓரளவுக்கு வரவேற்பு பெற்றதாகவும் அதன் பின்பு பாண்டியராஜ் படத்தில் நடிக்க கமிட் ஆன போது அதையும் அவருடைய மாமியார் தான் தயாரிக்க இருந்தாராம்.

 அந்த படத்திற்கு ரவிக்கு 25 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். ஆனாலும் உங்களுக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை என அவருடைய மாமியார் சொல்லி உள்ளார். ஆனாலும் ரவி சம்மதிக்காததால் படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் சுஜாதா. 

இதனால் குறித்த இயக்குனர் இது செட் ஆகாது என சொல்லி அதிலிருந்து விலகி விட்டாராம். இந்த விஷயம் ரவிக்கு தெரிய வர அவர் தனது பட வாய்ப்பு பரிபோக உங்க அம்மா தான் காரணம் என மனைவியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement