• Jan 13 2025

வளர்ந்த குழந்தையை பக்கத்துல வச்சிட்டு ஒரு தாய் செய்ற காரியமா இது? வைரல் வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ், இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் நடித்த எமி ஜாக்சன், இறுதியாக கம்பேக் கொடுத்த படம் தான் மிஷன் சாப்டர் 1. இதில்  இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

ஆர்யா நடித்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்க மகன், கெத்து, 2.0 உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.

அதன் பிறகு பிரபல தொழில் அதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் செட்டிலானார். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ஆனாலும் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.


இதைத் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திய எமி ஜாக்சன், மீண்டும் காதலில் விழுந்தார். அவரும் பிரபல நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரும் தற்போது டேட்டிங்கில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சொகுசுப் படகில் சுற்றுலா செல்லும் எமி ஜாக்சன், அவரது மகன் மற்றும் அவரது பார்ட்னரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த வீடியோவில் எமி ஜாக்சன் மகன் நன்றாக வளர்ந்து துள்ளி குதித்து விளையாடும் காட்சியும், எட் வெஸ்ட்விக் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் லிப் கிஸ் அடிக்கும் போட்டோவையும் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.


 

Advertisement

Advertisement