• Jan 15 2025

கல்கி 2898 ஏடி படத்தின் வசூலில் குளறுபடி தகவல்! இருவருக்கு 25 கோடி ரூபாய் அபராதம்?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபல நடிகர் பிரபாஸ், கமலஹாசன் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் உட்பட பல பிரபல நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் கல்கி 28 98 ஏடி.

இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகின்றது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது இதையும் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், கல்கி 28 98 ஏடி படத்தின் தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து போலி தகவல்கள் வழங்கிய இரண்டு பேர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்துள்ளார்களாம். அதன்படி அவர்கள் இருவருக்கும் சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


அதாவது சினிமா விமர்சகர்களான இருவர் வேண்டுமன்றே கல்கி படத்தின் வசூல் குறித்து போலியான புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளதாகவும், அதனை தொடர்ந்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ட்வீட் செய்து வருவதாகவும் கல்கி பட குழு தெரிவித்துள்ளது.

இதனால் கல்கி 2898 ஏடி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை நிரூபிக்கும் வகையில் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதுவும் குறித்த காலக்கெடுவுக்குள் அவர்கள் சமர்ப்பிக்க தவறினால் 25 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement