• Jul 24 2025

சபாஷ் சரியான போட்டி..!! அதிரடியாக வெளியான அந்தகன் ரிலீஸ் தேதி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

90களில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் பிரசாத் நடிப்பில் அவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கிய திரைப்படம் தான் அந்தகன்.

இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்தப் படம் நீண்ட நாட்களாகவே ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக் படம் தான் அந்தகன். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த நிலையில், தற்போது அந்தகன் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது  இரண்டு படங்களும் நேரடியாக ஒரே நாளில் போட்டி போட்டு ரிலீஸாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement