• Feb 25 2025

லொள்ளு சபா நடிகர் உதயாவுக்கு பண உதவி செய்த KPY பாலா...!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா தற்போது பல சமூக சேவைகளை மக்களுக்காக செய்து வருகின்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கோமாளியாக நிகழ்ச்சியினை தூக்கி நிறுத்திய இவர் தற்போது சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.


இந்த நிலையில் பாலா தற்போது சர்க்கரை நோயால் கால் அகற்றப்பட்ட லொள்ளு சபா நடிகர் சிறிக்கோ உதயாவுக்கு வீடு தேடி சென்று பண உதவி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த உதவி மூலம் தனி நபராகவும் ரசிகர்களுக்குமான ஒரு நல்ல உதாரணமாகவும் கருதப்படும் KPY பாலா இவரது அன்பு தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.


பாலாவின் இந்த தன்னார்வ உதவியுடன் உதயாவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது அதன் மூலம் பாலாவின் மனிதாபிமானம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement