• Jan 14 2025

கள்ளச்சாராய விவகாரத்தில் பொங்கியெழுந்த ஆண்டவர்! எக்ஸ் தள பதிவு வைரல்?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த காரணத்தினால் கொத்து கொத்தாக மனித உயிர்கள் இறந்து கிடக்கின்றன. தற்போது வரையில் 36 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்தவர்கள் வீட்டில் வந்து படுத்த நிலையில் திடீரென வாந்தி வயிற்று எரிச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படவே அவர்கள் மருத்துவமனையை நாடியுள்ளார்கள்

மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 36 பேர் இதுவரையில் உயிரிழந்தார்கள். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் தமிழ்நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் இது தொடர்பில், முக்கிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சத்யராஜ், சூர்யா உள்ளிட்டோர் எந்த குரலையும் காட்டாமல்  அமைதி காக்கின்றார்கள். இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவரது பதிவில், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். 

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது.. என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement