• Jan 13 2025

கள்ளக்குறிச்சி பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் விஷால்! மு.க ஸ்டாலிக்கு நேரடி அறிக்கை !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சமூக பிரச்சனைகளுக்கு நடிகர்கள் குரல் கொடுப்பதும் அது வைரலாக்குவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு சார்பாக விஷால் குரல் கொடுத்துள்ளார்.


நடிகர் விஷால் தனது x தல பக்கத்தில் "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில்  விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 


"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்." என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின்  அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்." என குறிபிட்டுள்ளார்.


Advertisement

Advertisement