• Mar 01 2025

விஜய் சாரை பார்த்தா எனக்கு கை எல்லாம் நடுங்கும்! மமீதா பைஜூ அதிரடி பேட்டி

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை மமிதா பைஜு சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் தளபதி விஜய் குறித்து ஒரு உணர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். விஜயை நேரில் சந்தித்தபோது அவர் எப்படி உணர்ந்தார் என்பதை உண்மையுடன் விவரித்துள்ளார்.

மமிதா பைஜு கூறியதாவது , "நான் விஜய் சாரை நேரில் பார்த்தபோது, ‘ஹாய் சார்’ என்றேன். அதற்குமேல் என்னால் பேச முடியவில்லை, கைகள் நடுங்கின. இதனை அறிந்த விஜய் சார் என்னைப் பார்த்து ‘ஹாய் மா’ என்று கை கொடுத்து அரவணைத்துக் கொண்டார். அந்த தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றார்.


தளபதி விஜய் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் அவர் மிகவும் எளிமையாக இருப்பதுடன் அனைவரிடமும் அன்பாகவும் நடந்துகொள்கிறார்.விஜயை நேரில் சந்தித்த பல இளம் நடிகர்களும், அவரது நேர்மை, பணிவு பற்றிக் கூறியுள்ளனர்.

மலையாள திரையுலகில் ஒரு முக்கியமான இளம் நடிகையாக வலம் வருகிற மமிதா பைஜு, தற்போது தமிழ் திரையுலகிலும் தனது தடத்தை பதிக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக, மதுரமன் மற்றும் ப்ரேமம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


மமிதா பைஜுவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி எப்போதும் எளிமையானவராக இருப்பவர் என்றதுடன் விஜயை நேரில் பார்த்தாலே மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement