சென்னையில் பிறந்து வளர்ந்து தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஐடி கம்பெனியில் வேலை செய்து அதன் பின்பு youtube மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய இயக்கத்தில் கோமாளி படம் வித்தியாசமான கதை உடன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
எதார்த்தமான கதையும் எதார்த்தமான நடிப்பும் என எல்லோரும் ரசிக்கும் படியாக படத்தை கொடுத்து மாஸ் காட்டினார். அதன்பின்பு லவ் டுடே படத்தின் மூலம் தானே நடிகராக அறிமுகமாகி சிறந்த நடிகருக்கான சைமா விருது, சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பெயர் விருது போன்றவற்றைப் பெற்றார்.
மேலும் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 100 கோடிகளை கடந்து ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் இந்த படம் நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது.
தற்போது டிராகன் படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கும் ஐல்கே படத்திலும் நடித்து வருகின்றார். இது டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் படுவேகமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அந்தப்படம் பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.
ஆனாலும் 60 கோடிகளில் உருவாக்கப்பட்டு இந்த படம் வெறும் 10 கோடி வசூலை கூட தாண்ட முடியாமல் திக்கு திணறி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பிரதீப் இப்படி மொக்கை வாங்கி விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
Listen News!