• Dec 27 2024

மீனாவை அசால்ட்டாக மடக்கிய முத்து ... ரொமாண்டிக்காக வெளியான புதிய ப்ரோமோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

இன்றைய எபிசோட்டில் முத்து பாராட்டுவார் என நினைத்து மீனா அவருக்காக பெசலெட் தோசை சுட்டுக் கொடுக்கின்றார். ஆனாலும் முத்து போன் பேசியவாறு மீனாவை அழைத்து சட்னி, தண்ணீர் என கேட்கிறார். 

இதன் காரணத்தினால் மீனா ஏமாந்தது மட்டுமில்லாமல் பெட் கட்டிய தனது சக தோழிகளிடம் 50 ரூபாயை கொடுக்கின்றார். மேலும் அவர் சவாரி வந்ததால போன் பேசிக்கிட்டே போயிட்டாரு என சமாளித்து விட்டு வீட்டுக்கு வருகின்றார்.


இதை தொடர்ந்து தற்போது வீட்டுக்கு வந்த முத்து, தான் சவாரி போன இடத்தில் மீனாவுக்கு சாரி வாங்கி வந்ததாக சொல்லி அவருக்கு சாரியை கொடுக்க, மீனா ஒன்றுமே பேசாமல் அதை மேசையில் வைத்து விடுகின்றார்.

இதை பார்த்து முத்து எதற்காக ஒன்றுமே சொல்லவில்லை என கேட்க, நானும் உங்களுக்காக காலையில பார்த்து பார்த்து பெசலெட் தோசை சுட்டேன். ஆனா நீங்க ஏதாவது சொன்னீங்களா என்று கேட்க, நீ எப்பவுமே நல்லாத்தானே சமைப்பா என்று சொல்லி மீனாவை மடக்குகிறார் முத்து இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ...

Advertisement

Advertisement