• Dec 27 2024

இர்ஃபான் வீட்டிற்கு நேரடியாக சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்த நெப்போலியன்! தடபுடல் விருந்து வேறு..

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் வில்லனாகவும் சிறந்த அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர் நெப்போலியன். இப்போதும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் மனதுக்கு நெருக்கமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கின்றார்.

நெப்போலியன் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி, அங்கு ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருவதோடு 3000 ஏக்கரில் விவசாய பண்ணை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

நெப்போலியன் தீவிர தமிழ் பற்றாளராக இருந்தபோதும், அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகுவதற்கு காரணம் அவரின் மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு தான். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே அமெரிக்காவிலேயே செட்டிலாகியுள்ளார்.


தற்போது தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நெப்போலியன், அவருக்கு நிச்சயதார்த்தத்தை வீடியோ காலிலேயே நடத்தி முடித்துள்ளார். 

இந்த நிலையில், நெப்போலியன் தனது மகனின் திருமணத்திற்கு பிரபல யூட்யூபரான இர்ஃபான் வீட்டிற்கு நேரடியாகவே சென்று திருமண பத்திரிகையை கொடுத்துள்ளார்.

தனுஷ் - அக்ஷயா திருமணம ஜப்பானின் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ளத்தையும் உறுதி செய்துள்ளார். திருமண பத்திரிகையுடன் சேர்த்து அனைவருக்கும் வெள்ளி கிண்ணம் ஒன்றையும், நட்ஸ் அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் பரிசாக கொடுத்து வருகின்றனர் நெப்போலியன் குடும்பத்தினர்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இர்பான், நெப்போலியன் குடும்பத்திற்கு தடபுடலாக விருந்து வழங்கியிருந்தமையும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement