• Dec 26 2024

வரலட்சுமி திருமணத்திற்கு பிறகும் நடிப்பாரா? நிக்கோலாய் சொன்ன பளீச் பதில்!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி மும்பையில் பிரபல தொழிலதிபராக காணப்படும் நிக்கோலாய் சத்தேவ் என்பவரை கடந்த பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் தாய்லாந்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஆனாலும் திருமண ரிசப்ஷன் பலரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்றைய தினம் முதன்முறையாக இருவரும் தங்களது உறவு குறித்தும் காதல் குறித்தும் செய்தியாளர்களிடம் மனம் திறந்து உள்ளார்கள்.

திருமணத்திற்கு பிறகு நாடு திரும்பிய நிலையில் இன்று சென்னையில் தனது தந்தை சரத்குமார் மற்றும் கணவர் நிக்கோலாயுடன் வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.


அதன்படி  நிக்கோலாய் கூறுகையில், எல்லோரும் வந்ததற்கு நன்றி. நான் இப்போதுதான் தமிழ் கற்றுக்கொண்டு வருகின்றேன். எனக்கு தண்ணீர், சாப்பாடு, பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தெரியும். மும்பையில் இனிமேல் என் வீடு கிடையாது. சென்னையில் தான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகின்றேன். எனது பெயர் நிக்கோலாய் சத்தேவ. நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணை திருமணம் செய்துள்ளேன். திருமணத்துக்கு பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் சத்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன். ஆனால் நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கின்றேன்.

நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சத்தேவ் என்பது தான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமி பெயரின் பெருமை இனி எனக்கு சொந்தம். வரலட்சுமி திருமணம் செய்து கொண்டாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை. அவருடைய முதல் காதல் எப்போதுமே சினிமாவில் நடிப்பது தான். திருமணத்திற்கு பிறகும் அவர் நடிப்பார். உங்கள் அன்பும் ஆதரவு நிச்சயம் அவருக்கு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து வரலட்சுமி கூறுகையில், நீங்கள் எல்லோரும் வந்ததற்கு நன்றி. நிக்கோலாய் சொன்னது போல எனது காதல் அவர். ஆனால் என்னுடைய உயிர் சினிமா தான்.  அனைவருக்கும் நன்றி என தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement