• Jan 01 2025

வட சென்னை 2 படம் கட்டாயம் வரும்...!! உறுதி செய்து நைசாக நழுவிய வெற்றிமாறன்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

2018 ஆம் ஆம் ஆண்டில் வெளியான வட சென்னை படத்தில் நடிகர் தனுஷ் உடன் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் மீதான நம்பிக்கை  ரசிகர்களிடையும் தயாரிப்பார்கள் இடையும் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்பு தனுஷிற்கு அழுத்தமான கதைகளில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது. அதற்கு வடசென்னை திரைப்படம் முக்கிய காரணமாக அமைந்தது.

இதன் காரணத்தினால் வடசென்னை படத்தில் இரண்டாவது பாகம் தொடர்பில் ரசிகர்கள் இடையே அதிக கேள்விகள் எழுந்தன. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை வெற்றிமாறனும் இயக்கவில்லை என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இதைக் கேட்ட ரசிகர்கள் அவர்கள் இருவரும் இல்லை என்றால் அது எப்படி நியாயமாகும் என கேள்வி எழுப்பி  வந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் விரைவில் வடசென்னை 2 படம் வரும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் தான் எப்போதுமே தான் இருந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கதைக்களங்களை உருவாக்குவதாகவும் தன்னுடைய கதைகளை மட்டுமே கையில் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல மொழிகளை கடந்து நிற்கும் படங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இயக்க உள்ளதாகவும் அதில் தனுஷ் நடிக்க போவதில்லை என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது குறித்து பேசாமல் வட சென்னை 2 படம் குறித்து மட்டும் பேசி உள்ளார் வெற்றி மாறன்.

Advertisement

Advertisement