• Dec 26 2024

கோமதிக்கு முதல் வெற்றி.. பாக்கியம் தந்திரம் கூட பலிக்கவில்லை.. பெட்டிப்பாம்பாய் அடங்கிய பாண்டியன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று ராஜி, பெயர்களை வைத்து விளையாடிய பேப்பரை தற்செயலாக கதிர் பார்த்து எடுத்துக் கொண்டு செல்கிறார்.

இதனை அடுத்து பாண்டியன் கடைக்கு கிளம்பும் போது கோமதி அவரிடம் ’இனிமேல் தங்கமயில் சாப்பாடு கொண்டு வர மாட்டா, நீங்கள் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட வேண்டும் ’என்று கறாராக கூற, ‘தங்கமயில்  சாப்பாடு கொண்டு வருவதால் எங்களுக்கு நேரம் மிச்சம்’ என்று பாண்டியன் கூறினாலும் அதை கேட்காமல் பாண்டியனை கோமதி அதட்டுகிறார். ’இனிமேல் தங்கமயில் சாப்பாடு கொண்டு வர மாட்டாள், இன்று மட்டுமல்ல , இனிமேல் என்றுமே சாப்பாடு கொண்டு வர மாட்டா, நீங்க வீட்டுக்கு வந்து தான் சாப்பிட வேண்டும் என்று மீண்டும் கண்டிஷனுடன் கூற பாண்டியன் வேறு வழியின்றி ’சரி’ என்று ஒப்புக்கொள்கிறார்.

இதை பார்த்த மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் ’நீங்கள் சூப்பர் அத்தை’ என்று கூறுகின்றனர். அப்போது பாண்டியனுக்கும் சரவணனுக்கும் தங்கமயில் சாப்பாடு எடுத்து கொண்டு செல்ல தயாராகும் போது, ‘உன் புருஷன் சரவணனுக்கு மட்டும் சாப்பாடு கொண்டு போ, மற்றவர்களுக்கு சாப்பாடு கொண்டு செல்ல வேண்டாம், அந்த கேரியரை வைத்துவிட்டு போ’ என்று அதட்ட, மயில் சோகமாகிறார்.



’எதற்காக இப்படி என்னை திட்டுகிறீர்கள்’ என்று தங்கமயில்  சொல்ல ’இங்கு நான்தான் மாமியார், நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும், நீ சொல்வதை நான் கேட்க முடியாது’ என்று கூற தங்கமயில் சோகமாக பாண்டியன் சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு சரவணனுக்கு மட்டும் கொண்டு செல்கிறார். அப்போது மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் கோமதி கட்டி பிடித்துக் கொண்டு ’நீங்கள் கெத்து தான் அத்தை’ என்று போற்றி புகழ்கின்றனர்.

இந்த நிலையில் தங்கமயில் அழுது கொண்டே தனது அம்மாவுக்கு போன் செய்து நடந்ததை கூற ’நீ கவலைப்படாதே, நானும் உன் அப்பாவும் உன் வீட்டுக்கு சென்று என்ன செய்ய வேண்டும் என்பதை பார்த்துக் கொள்கிறோம்’ என்று ஆறுதல் கூறுகிறார். இதனை அடுத்து பாண்டியன் வீட்டுக்கு வரும் பாக்கியம் மற்றும் அவரது கணவர் சாப்பாடு கொண்டு செல்வது குறித்து கூற கோமதி அவருக்கு பதில் கூறும் காட்சிகளும் ’இதில் நீங்கள் தலையிடாதீர்கள், தங்கமயில் தான் சாப்பாடு கொண்டு போவார்’ என்று பாக்கியம் அன்பு கட்டளையுடன் சொல்லும் காட்சிகளும் உள்ளன.

அதன் பின்னர் சரவணன் - தங்கமயிலை ஹனிமூனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி பாக்கியம் கூற  பாண்டியனும் ’சரி பார்க்கலாம்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து இருவரும் சென்ற பிறகு மீண்டும் கோமதி மீண்டும் பாண்டியனிடம் ’அவங்க சொல்றாங்க என்பதற்காக எல்லாம் சாப்பாடு இனி கடைக்கு வராது, நீங்கள் தினமும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட வேண்டும்’ என்று கூற, அப்போது பாண்டியன் ’சரி’ என்று பெட்டி பாம்பாய் அடங்கி சொல்கிறார். முதல் முறையாக கோமதிக்கு ஒரு வெற்றி கிடைத்துள்ளதை பார்த்து மீனா மற்றும் ராஜி பெருமை அடைகின்றனர்.

Advertisement

Advertisement