• Dec 26 2024

பிக் பாஸில் வெளியேறிய பூர்ணிமாவை வழிமறித்த மக்கள்! பயத்தில் தப்பித்து ஓடிய பூர்ணிமா? ஷாக் தகவல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைக்கப்பட்ட பணப்பெட்டியை 16 லட்சங்களுடன் எடுத்துக் கொண்டு வெளியேறியவர் தான் பூர்ணிமா ரவி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவர் சினிமாத் துறை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறிய வீடியோக்கள், போட்டோ சூட் என ஆரம்பித்து நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது காமெடி வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து அண்மையில் நயன்தாராவுடன் இணைத்து நடித்த அன்னப்பூரணி படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இதற்கு அடுத்ததாக சாதாரண கிராமத்து வாழ்க்கையை எடுத்துக் காட்டும் படைப்பாக இவர் நடிப்பில் ' செவப்பி' என்ற படமும் விரைவில் வெளிவரவுள்ளது.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பூர்ணிமா தற்போது கடும் பிசியாக இருந்த நேரத்தில், மக்களை பார்த்து பயந்து ஓட்டம் எடுத்துள்ளார். அதற்கான காரணம் என்னவென பார்ப்போம்.


அதன்படி, இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பூர்ணிமா வெளியேறும் போது , அங்கு நூறுக்கும் மேற்பட்ட  மக்கள் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் வெளியேறும் போது யாரும் தன்னை தாக்கி விடுவார்களோ என்ற பயத்தில் அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் பூர்ணிமா அதிகமாக மாயாவுக்கு சப்போர்ட் பண்ணுவதும், அவர்கள் இருவரும் சேர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் செய்த காரியங்களும் தான்.

அதன் காரணமாகவே அவர் மக்கள் கூட்டத்தை பார்த்ததும் ஒழிந்து ஒழிந்து சென்றுள்ளாராம். இதை அவதானித்த ரசிகர்கள் அவர்கள் செய்த காரியத்திற்கு இது தான் தண்டனை என கழுவியூற்றி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement