• Dec 26 2024

அப்பனை விட நடிப்பில் அசுரனாக மிரட்டும் சூர்யா.. வெளியானது பீனிக்ஸ் வீழான் டீசர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் விஜய் சேதுபதி. தற்போது நடிகராக மட்டுமின்றி வில்லனாகவும் ஹாலிவுட், பாலிவுட் எனக் கலக்கி வருகின்றார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் வீழான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளதோடு தற்போது அந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத், நானும் ரவுடிதான் படங்களில் அவருடைய மகன் சூர்யாவும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது பீனிக்ஸ் வீழான் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.


இந்த படத்தை பிரபல சண்டை இயக்குனரான அனல் அரசு இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படம் பற்றி விஜய் சூர்யா அண்மையில் வெளியிட்ட பேட்டி ஒன்றில், எனக்கு சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு ஆசை. இந்த படத்தில் கூட சூர்யா என்று தான் பெயரை பயன்படுத்த சொன்னேன். இப்போது காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டுள்ளேன். அடுத்து அப்பாவோட சேர்ந்து நடிப்பேனா என்று கேட்டால் அதைப் போக பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.


Advertisement

Advertisement